நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5367
Zoom In NormalZoom Out


 

செறிகுறி புரிதிரி பறியா
வறிவனை முந்துறீஇ”                        (கலி.39)

என்றாற்போல     வருவனவும்    பிறவும்    வெளிப்படையாமாற்றாற் கண்டுணர்க. (48)

வரைவு இருவகைப்படுமெனல்

140. வெளிப்பட வரைதல் படாமை வரைதலென்
றாயிரண் டென்ப வரைத லாறே

இதுவரையும் பகுதி இனைத்தென்கிறது.

வெளிப்பட  வரைதல்  -  முற்கூறியவாற்றானே களவு வெளிப்பட்ட பின்னர்    வரைந்து   கோடல்;   படாமை   வரைதல்  -  அக்களவு வெளிப்படுவதன்  முன்னர்   வரைந்துகோடல்;  என்று  ஆ  இரண்டு
என்ப  வரைதல்  ஆறே - என்று கூறப்பட்ட  அவ்விரண்டே  என்று கூறுவர் ஆசிரியர் வரைந்து கொள்ளும் வழியை எ-று.

“சேயுயர் வெற்பனும் வந்தனன்
பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே.”      (கலி.39)

இது வெளிப்பட்டபின் வரைவு நிகழ்ந்தது.

“கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து
வானின் அருவி ததும்பக் கவினிய
நாட னயனுடைய னென்பதனான் நீப்பினும்
வாடல் மறந்தன தோள்.”            (ஐந்திணை எழு.2)

இது வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது.

“எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே”    (அகம்.195)

என்றாற்   போல்வன  வெளிப்படுவதன்முன்னர்க்   கொண்டு  தலைக்
கழிந்துழிக் கொடுப்போரின்றியுங்  கரணம்   நிகழ்ந்தமையின்,  அதுவும்
வெளிப்படாமல் வரைந்ததாம். (49)

ஓதல், பகை, தூது என்ற மூன்றினும் வரையாது பிரிதல்
கிழவோற் கில்லையெனல்

141. வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும்
ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக
வரையாது பிரிதல் கிழவோற் கில்லை.

இது    முதற்கூறிய    வரைவு    நிகழ்த்தாது   பிரியும்   இடம்
இதுவெனவும் பிரியலாகா இடம் இதுவெனவுங் கூறுகின்றது.

(இ-ள்.) வெளிப்படைதானே கற்பினோடு  ஒப்பினும்  -  முற்கூறிய
வெளிப்படை    தானே   கற்பினுள்   தலைவி  உரிமை  சிறந்தாங்கு
அருமை சிறந்து  கற்போடொத்ததாயினும்;  ஞாங்கர்க்  கிளந்த  மூன்று
பொருளாக - முற்கூறிய  ஓதல்  பகை  தூதென்ற மூன்றும் நிமித்தமாக; வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை - வரைவிடைவைத்துப் பிரிதல் தலைமகற்கில்லை எ-று.

மூன்றுமென   முற்றும்மை   கொடாது   கூறினமையின்,   ஏனைப்
பிரிவுகளின் வரையாது  பிரியப்பெறும்    என்றவாறாயிற்று.    அவை
வரைதற்குப்   பொருள்வயிற்   பிரிதலும்,  வேந்தற்குற்றுழிப் பிரிதலுங்,
காவற்குப்