நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5370
Zoom In NormalZoom Out


 

கொள்ளுதற்குரிய   முறைமையினையுடைய  தலைவன்;  கிழத்தியை -
ஒத்த குலத் தாளும் இழிந்த குலத்தாளுமாகிய தலைவியை; கொடைக்கு
உரி மரபினோர் கொடுப்ப  -  கொடுத்தற்குரிய முறைமையினையுடைய
இருமுது குரவர் முதலாயினார் கொடுப்ப; கொள்வது - கோடற்றொழில்
எ-று.

‘எனப்படுவது’  என்னும்  பெயர்  ‘கொள்வது’  என்னும்  பெயர்ப்
பயனிலை கொண்டது; இது சிறப்புணர்த்துதல்    ‘அவ்வச்சொல்லிற்கு’
(தொல்.சொல்.இடை.47) என்னுஞ் சூத்திரத்துட் கூறினாம்.  ‘கொடுப்போ
ரின்றியும்’ (தொல்.பொ.143) என  மேல்  வருகின்றதாகலின் இக் கற்புச்
சிறத்தலிற் சிறந்ததென்றார். இஃது  ‘என’   என்கின்ற   எச்சமாதலிற்
சொல்லளவே எஞ்சிநின்றது. இதனாற்  கரணம்   பிழைக்கில்  மரணம்
பயக்குமென்றார். அத்தொழிலின் நிகழுங்கால்  இவளை   இன்னவாறு
பாதுகாப்பாயெனவும், இவற்கு இன்னவாறே நீ குற்றேவல்  செய்தொழு
கெனவும் அங்கியங்கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படு
தலின்  அத்  தொழிலைக்   கற்பென்றார்.   தலைவன்  பாதுகாவாது
பரத்தைமை செய்து ஒழுகினும் பின்னர்  அது  கைவிட்டு  இல்லறமே
நிகழ்த்தித் துறவறத்தே செல்வனென் றுணர்க. இக் கற்புக்காரணமாகவே
பின்னர் நிகழ்ந்த ஒழுகலாறெல்லாம் நிகழவேண்டுதலின்  அவற்றையுங்
கற்பென்று அடக்கினார்.  இருவரும் எதிர்ப்பட்ட  ஞான்று  தொடங்கி
உழுவலன்பால் உரிமை   செய்து  ஒழுகலிற்  ‘கிழவனுங்  கிழத்தியும்’
என்றார்.  தாயொடு பிறந்தாருந் தன்னையருந் தாய்த்தாரும் ஆசானும்
முதலியோர் கொடை