நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5380
Zoom In NormalZoom Out


 

இதனுள்  மனைவி  அமைந்துநின்ற   இல்நிலையே  இல்லறமாவ
தெனவே    யாம்    முன்னரொழுகிய    ஒழுக்கமும்    இத்துணை
நன்மையாயிற்று என்றானாயிற்று. இது குறிப்பெச்சம்.

நாமக்காலத்து  உண்டெனத்   தோழி   ஏமுறு  கடவுள்  ஏத்திய
மருங்கினும்   (தோழி   நாமக்காலத்து  ஏமுறு  கடவுள்  உண்டென
ஏத்திய  மருங்கினும்) - தோழி இன்னது  விளையுமென்று  அறியாது
அஞ்சுதலையுடைய  களவுக்காலத்தே   யாம்   வருந்தாதிருந்ததற்குக்
காரணமாயதோர்  கடவுள்  உண்டு  எனக்கூறி  அதனைப்  பெரிதும்
ஏத்திய இடத்துத் தலைவன்
வதுவைகாறும்  ஏதமின்றாகக்  காத்த  தெய்வம் இன்னும்காக்குமென்று
ஏத்துதலும்;

அது,

“குனிகா யெருக்கின் குவிமுகிழ்...
தாமரை முகத்தியைத் தந்த பாலே.”

என்னுங்  குணநாற்பதில் ஏமுறு  கடவுளைத்  தலைவன்  தானே
ஏத்தியது போலாது,

“நேரிழாய் நீயும்நின் கேளும் புணர
வரையுறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇயாம் ஆடக் குரவையுள்
கொண்டு நிலைபாடிக் காண்.”              (கலி.39)

எனத்   தான்   பராய   தெய்வத்தினைத் தோழி கற்புக்காலத்துப்
பரவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவனும் ஏத்துதலாம்.

உ-ம்:

“அதிரிசை அருவி பெருவரைத் தொடுத்த
பல்தேன் இறாஅல் அலகுநர்க் குதவும்
நுந்தைநல் நாட்டு வெந்திறன் முருகென
நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி
என்வயின் நோக்கலின் போலும் பன்னாள்
வருந்திய வருத்தந் தீரநின்
திருத்திழைப் பணைத்தோள் புணர்ந்துவந் ததுவே.”

தேன்  இறாலை அல்குநர்க்கு  உதவும் நாடாதலின் நின்நோய்க்கு
இயற்றிய     வெறி     நுமர்க்குப்     பயன்படாது      எமக்குப்
பயன்றருமென்றோன் என்வயின் நோக்கலின் என்றது, எனக்குப் பயன்
கொடுக்க வேண்டுமென்று பராவுதலிற்  றோளைப் புணர்ந்து உவந்தது
என்றான்.