நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5525
Zoom In NormalZoom Out


 

ரபின் உள்ளுறை யைந்தே.

இது, மேல்  வெளிப்படக்  கிளப்பன  கூறிப்  பின் வெளிப்படாமற்
கிளக்கும் உள்ளுறை இனைத்தென்கின்றது,

(இ-ள்.)   உடனுறை  -  நான்கு  நிலத்தும் உளவாய் அந்நிலத்துட
னுறையுங் கருப்பொருளாற்   பிறிதொன்று  பயப்ப  மறைத்துக்  கூறும்
இறைச்சியும்; உவமம்  -  அக் கருவாற் கொள்ளும் உள்ளுறையுவமமும்
ஏனையுவமமும்;   சுட்டு   -   உடனுறை  யுவமமும் அன்றி நகையுஞ்
சிறப்பும் பற்றாது வாளாது ஒன்று   நினைந்து   ஒன்று  சொல்வனவும்
அன்புறு  தகுந  இறைச்சியுட்  சுட்டிவருவனவும்;  நகை  -  நகையாடி
ஒன்று  நினைத்து  ஒன்று  கூறுதலும்;  சிறப்பென   -   ஏனையுவமம்
நின்று  உள்ளுறை  யுவமத்தைத்   தத்தங்  கருப்பொருட்குச்  சிறப்புக்
கொடுத்து  நிற்றலும் என்று; கெடலரும் மரபின் உள்ளுறை  ஐந்தே  -
கெடுத லரிதாகிய முறைமையினையுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும்
எ-று.

ஒன்றனை உள்ளுறுத்து அதனை வெளிப்படாமற் கூறலின் அவற்றை
உள்ளுறையாமென்றார்.

“இறைச்சி தானே”  (தொல்.பொ.229)  ‘இறைச்சியிற் பிறக்கும்’
(தொல்.பொ.230)
 என்பனவற்றுள்  இறைச்சிக்குதாரணங் காட்டினாம்.
உவமம் உவமவியலுட் காட்டுதும்.

“பெருங்கடல் முகந்த பல்கிளைக் கொண்மூ
இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்
போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந்
தறநெறி பிழையாத் திறனறி மன்னர்
அருஞ்சமத் தெரிர்ந்த பெருஞ்செய் ஆடவர்
கழித்தெறி வாளின் அழிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி நாளுங்
கொன்னே செய்தியோ அரவம் பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்டக இயலித்
தழலை வாங்கியுந் தட்டை யோப்பியும்
அழலேர் செயலை யந்தளிர் தஇயுங்
குறமகள் காக்கு மேனற்
புறமுந் தருதியோ வாழிய மழையே.”          (அகம்.188)

இதனுட்  கொன்னே  செய்தியோ    அரவமென்பதனாற் பயனின்றி
அலர்விளைத்தியோவெனவுங் கூறி ஏனற்புற