|
முந் தருதியோ என்பதனான் வரைந்து கொள்வையோ வெனவுங்
கூறித் தலைவனை மழைமேல் வைத்துக் கூறலிற்
சுட்டாயிற்று.
கொன்னே செய்தியோ என்றதனான் வழுவாயினும்
வரைதல்
வேட்கையாற் கூறினமையின் அமைந்தது.
‘அன்புறு தகுந’ (தொல்.பொ.231)
என்பதனுள் ஏனையதற்கு
உதாரணங் காட்டினாம்.
“விளையா டாயமொடு பிறவுமா ருளவே.”
(நற்.172)
இதனுட் புன்னையை அன்னை
நுவ்வையாகுமென்றதனான்
இவளெதிர் நும்மை நகையாடுத லஞ்சுதுமென நகையாடிப்
பகற்குறியெதிரே கொள்ளாமைக் குறிப்பினான்
மறைத்துக் கூறி
மறுத்தவாறு காண்க. இதனைச் செவ்வனங் கூறாமையின் அமைத்தார்.
‘உள்ளுறை யுவம மேனை யுவமம்’ (தொல்.பொ.46)
என்னுஞ்
சூத்திரத்து
“விரிகதிர் மண்டிலம்” (கலி.71) என்னும் மருதக்கலியுட்
சிறப்புக் கொடுத்து நின்றது காட்டினாம்.
அறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவுஞ் செவ்வனங்
கூறப்படுதலின் இவை கரந்தே கூறப்படுதலிற்
‘கெடலரு மரபின்’
என்றார். இவை தோழிக்குந் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்களை
நோக்கி யுணர்க.
(48)
உள்ளுறை யைந்தானும் தலைவியுந் தோழியுமாக்கிய
வின்பம் தலைவன்கண்ணும் நிகழ்ந்து
இன்பஞ்செய்யுமெனல்
243. அந்தமில் சிறப்பின் ஆக்கிய இன்பந்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே.
இது, முற்கூறிய உள்ளுறைப்பித் தலைவற்கு
வருவதொரு
வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
ஆக்கிய அந்தமில் சிறப்பின் இன்பம்
- முற்கூறிய
உள்ளுறை ஐந்தானும்
அவர்களுண்டாக்கிய முடிவிலாக
சிறப்பினையுடைய இன்பம்; தன்வயின் வருதலும் வகுத்த பண்பு -
தலைவன் கண்ணும் நிகழ்ந்து இன்பஞ்
செய்தலுங் காமத்துக்கு
முதலாசிரியன் வகுத்த இலக்கணம் எ-று.
தலைவன் தன்மை என்ப தொன்றின்றி நந்தன்மையெனக் கருதுதலின்
யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் முனியாது இன்பமெனக்
கொள்வனெனக் கூறியவற்றை அவன்
இவை இன்பந்தருமென்றே
கோடலின் வழுவமையப்பட்டன. உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க.
|