சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   210
Zoom In NormalZoom Out


தொழிற்படுத்து அடக்கியும்,
அவர் அவர் உறு பிணி தமபோல் சேர்த்தியும்,
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ,
இரு பெயர் மூன்றும் உரிய ஆக,
உவமவாயில் படுத்தலும், உவமம்
ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பால் கிளவி.

195 கனவும் உரித்தால், அவ் இடத்தான.

196 தாய்க்கும் உரித்தால், போக்கு உடன் கிளப்பின்.

197 பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே,
நட்பின் நடக்கை ஆங்கு அலங்கடையே.

198 உயிரும் நாணும் மடனும் என்று இவை
செயிர் தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய.

199 வண்ணம் பசந்து புலம்புறு காலை,
உணர்ந்த போல, உறுப்பினைக் கிழவி,
புணர்ந்த வகையில் புணர்க்கவும் பெறுமே.

200 உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்,
'என் உற்றனகொல் இவை!' எனின் அல்லது
கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை.

201 'ஒரு சிறை நெஞ்சமொ உசாவும் காலை,
உரியதாகலும் உண்டு' என மொழிப.

202 'தன்வயின் கரத்தலும், அவன்வயின் வேட்டலும்,
அன்ன இடங்கள் அல்வழி எல்லாம்
மடனொடு நிற்றல் கடன்' என மொழிப.

203 'அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி