சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   211
Zoom In NormalZoom Out


அறத்து இயல் மரபு இலள் தோழி' என்ப.

204 'எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல்,
கூறுதல் உசாஅதல், ஏதீடு, தலைப்பாடு,
உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ,
அவ் எழு வகைய' என்மனார் புலவர்.

205 உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்,
அப் பொருள் வேட்கை கிழவியின் உணர்ப.

206 செறிவும், நிறைவும், செம்மையும், செப்பும்,
அறிவும், அருமையும், பெண்பாலான.

207 'பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின்
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்,
தன்னை அழிதலும், அவன் ஊறு அஞ்சலும்,
'இரவினும் பகலினும் நீ வா!' என்றலும்,
கிழவோன் தன்னை, 'வாரல்!' என்றலும்,
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்,
புரை பட வந்த அன்னவை பிறவும்,
வரைதல் வேட்கைப் பொருள' என்ப.

208 'வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல்
மரீஇய மருங்கின் உரித்து' என மொழிப.

209 'தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர்' என்ப.

210 உண்டற்கு உரிய அல்லாப் பொருளை