சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   212
Zoom In NormalZoom Out


உண்டன போலக் கூறலும் மரபே.

211 பொருள் என மொழிதலும் வரைநிலை இன்றே
காப்புக் கைமிகுதல் உண்மையான
அன்பே, அறனே, இன்பம், நாணொடு,
துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின்,
ஒன்றும் வேண்டா, காப்பினுள்ளே.

212 சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே.

213 உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்,
வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே.

214 'அறக் கழிவு உடையன பொருட் பயம் பட வரின்,
வழக்கு என வழங்கலும் பழித்து அன்று' என்ப.

215 மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க
நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே!

216 முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல்
நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே.

217 தாயத்தின் அடையா, ஈய செல்லா,
வினைவயின் தங்கா, வீற்றுக் கொளப்படா,
எம் என வரூஉம் கிழமைத் தோற்றம்
அல்லா வாயினும் புல்லுவ உளவே.

218 ஒரு பால் கிளவி ஏனைப் பாற்கண்ணும்
வருவகை