சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   213
Zoom In NormalZoom Out


தானே வழக்கு' என மொழிப.

219 எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.

220 பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே;
நிலத் திரிபு இன்று அஃது' என்மனார் புலவர்.

221 ஒருதலை உரிமை வேண்டினும், மகடூஉப்
பிரிதல் அச்சம் உண்மையானும்,
அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று
அஞ்ச வந்த ஆங்கு இரு வகையினும்,
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்,
போக்கும் வரவும் மனைவிக்கண் தோன்றும்.

222 வருத்த மிகுதி சுட்டும் காலை,
உரித்து' என மொழிப 'வாழ்க்கையுள் இரக்கம்'.

223 மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையும் காலை, புலவியுள் உரிய.

224 நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின்
புகழ் தகை வரையார், கற்பினுள்ளே.

225 இறைச்சிதானே பொருள் புறத்ததுவே.

226 இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே,
திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே.

227 அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும்,
வன்புறை ஆகும், வருந்திய பொழுதே.

228 செய் பொருள்