சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   214
Zoom In NormalZoom Out


அச்சமும் வினைவயின் பிரிவும்
மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே.

229 கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும்,
உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப.

230 கிழவோள், 'பிறள் குணம் இவை' எனக் கூறிக்
கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள்.

231 தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும்,
மெய்ம்மையாக அவர்வயின் உணர்ந்தும்,
தலைத்தாள் கழறல் தம் எதிர்ப்பொழுது இன்றே
மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே.

232 பொழுது தலைவைத்த கையறு காலை,
இறந்த போலக் கிளக்கும் கிளவி,
மடனே, வருத்தம், மருட்கை, மிகுதியோடு,
அவை நாற் பொருட்கண் நிகழும்' என்ப.

233 இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி
நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்,
வாய்மை கூறலும், பொய் தலைப்பெய்தலும்,
நல் வகையுடைய நயத்தின் கூறியும்,
பல் வகையானும் படைக்கவும் பெறுமே.

234 உயர்மொழிக் கிளவி உறழும் கிளவி;
ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே.

235 உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின்,
உரியதாகும், தோழிகண் உரனே.