சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   216
Zoom In NormalZoom Out


பினும்
அவை இல் காலம் இன்மையான.

245 'பண்ணைத் தோன்றிய எண் நான்கு பொருளும்
கண்ணிய புறனே நால் நான்கு' என்ப

246 நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே

247 நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப

248 'எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று
உள்ளப்பட்ட நகை நான்கு' என்ப.

249 இளிவே, இழவே, அசைவே, வறுமை, என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே.

250 மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையோடு,
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

251 புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு,
மதிமை சாலா மருட்கை நான்கே.

252 அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.

253 கல்வி, தறுகண், புகழ்மை, கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.

254 உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்றன