வெறுப்ப வந்த வெகுளி நான்கே.
255 செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.
256 ஆங்கவை ஒரு பால் ஆக, ஒரு பால்,
உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல்,
தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, எனாஅக்
கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல்,
நாணுதல், துஞ்சல், அரற்றுக் கனவு, எனாஅக்
முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை,
கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, எனாஅக்
கையாறு, இடுக்கண், பொச்சாப்புப் பொறாமை,
வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கு, எனாஅ-
அவையும் உளவே அவை அலங்கடையே.
257 'புகு முகம் புரிதல், பொறி நுதல் வியர்த்தல்,
நகு நயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மையொடு,
தகு முறை நான்கே ஒன்று' என மொழிப.
258 'கூழை விரித்தல், காது ஒன்று களைதல்,
ஊழ் அணி தைவரல், உடை பெயர்த்து உடுத்தலொடு,
கெழீஇய நான்கே இரண்டு' என மொழிப.
259 'அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல்,
இல் வலியுறுத்தல், இரு கையும் எடுத்தலொடு,
சொல்லிய நான்கே மூன்று' என மொழிப.
260 'பாராட்டு எடுத்தல், மடம் தப உரைத்தல்,
ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல்,
கொடுப்பவை

|