கோடல் உளப்படத் தொகைஇ,
எடுத்த நான்கே நான்கு' என மொழிப.
261 தெரிந்து உடம்படுதல், திளைப்பு வினை மறுத்தல்,
சுரந்திடத்து ஒழிதல், கண்டவழி உவத்தலொடு,
பொருந்திய நான்கே ஐந்து' என மொழிப.
262 புறம் செயச் சிதைதல், புலம்பித் தோன்றல்,
கலங்கி மொழிதல், கையறவு உரைத்தலொடு,
புலம்பிய நான்கே ஆறு' என மொழிப.
263 அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
மன்னிய வினைய நிமித்தம்' என்ப
264 வினை உயிர் மெலிவு இடத்து இன்மையும் உரித்தே
265 அவையும் உளவே அவை அலங்கடையே
266 இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல்,
எதிர் பெய்து பரிதல், ஏதம் ஆய்தல்,
பசி அட நிற்றல், பசலை பாய்தல்,
உண்டியின் குறைதல், உடம்பு நனி சுருங்கல்,
கண் துயில் மறுத்தல், கனவொடு மயங்கல்,
பொய்யாக் கோடல், மெய்யே என்றல்,
ஐயம் செய்தல், அவன் தமர் உவத்தல்,
அறன் அளித்து உரைத்தல், ஆங்கு நெஞ்சு அழிதல்,
எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல்,
ஒப்புவழி உவத்தல், உறு பெயர் கேட்டல்,
நலத் தக நாடின், கலக்கமும் அதுவே.
267 முட்டுவயின் கழறல், முனிவு மெய்ந் நிறுத்தல்,
அச்சத்தின்

|