சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   219
Zoom In NormalZoom Out


அகறல், அவன் புணர்வு மறுத்தல்,
தூது முனிவு இன்மை, துஞ்சிச் சேர்தல்,
காதல் கைம்மிகல், கட்டுரை இன்மை, என்று
ஆயிரு நான்கே அழிவு இல் கூட்டம்.

268 தெய்வம் அஞ்சல், புரை அறம் தெளிதல்,
இல்லது காய்தல், உள்ளது உவத்தல்,
புணர்ந்துவழி உண்மை, பொழுது மறுப்பு ஆக்கம்,
அருள் மிக உடைமை, அன்பு தொக நிற்றல்,
பிரிவு ஆற்றாமை, மறைந்தவை உரைத்தல்,
புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇ,
சிறந்த பத்தும் செப்பிய பொருளே.

269 பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு,
உருவு, நிறுத்த காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திரு, என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.

270 'நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி,
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை,
இன்புறல், ஏழைமை, மறப்பொடு, ஒப்புமை,
என்று இவை இன்மை' என்மனார் புலவர்.

271 கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க்கு அல்லது, தெரியின்,
நல் நயப் பொருள்கோள் எண்ண அருங்குரைத்தே.