சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   220
Zoom In NormalZoom Out


வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே
வகை பெற வந்த உவமத் தோற்றம்

273 விரவியும் வரூஉம் மரபின' என்ப

274 உயர்ந்ததன் மேற்றே, உள்ளுங் காலை.

275 சிறப்பே, நலனே, காதல், வலியொடு
அந் நால் பண்பும் நிலைக்களம்' என்ப.

276 கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும்

277 முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய

278 சுட்டிக் கூறா உவமமாயின்,
பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளவே!

279 உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்

280 பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும்

281 பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய

282 அவைதாம்,
அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப,
என்ன, மான, என்றவை எனாஅ
ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க ,
என்ற, வியப்ப, என்றவை எனாஅ
எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்பக்
கள்ளக் கடுப்ப,