ஆங்கவை எனாஅக்
காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள,
மாற்ற, மறுப்ப, ஆங்கவை எனாஅப்
புல்லப் பொருவப் பொற்பப் போல,
வெல்ல, வீழ, ஆங்கவை எனாஅ
நாட, நளிய, நடுங்க, நந்த,
ஓடப் புரைய, என்றவை எனாஅ
ஆறு ஆறு அவையும், அன்ன பிறவும்,
கூறும் காலைப் பல் குறிப்பினவே.
283
அன்ன, ஆங்க, மான, இறப்ப,
என்ன, உறழத், தகைய, நோக்கொடு,
கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்.
284
அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும்
285
எள்ள, விழையப், புல்லப் பொருவக்
கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ,
என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம்.
286
கடுப்ப, ஏய்ப்ப, மருளப், புரைய,
ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப, என்று
அப் பால் எட்டே மெய்ப்பால் உவமம்.
287
போல, மறுப்ப, ஒப்பக் காய்த்த,
நேர, வியப்ப, நளிய, நந்த, என்று
ஒத்து வரு கிளவி உருவின் உவமம்.
தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே.
288
நால்-இரண்டு ஆகும் பாலுமார் உண்டே
290
பெருமையும் சிறுமையும்

|