சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   222
Zoom In NormalZoom Out


மெய்ப்பாடு எட்டன்
வழி மருங்கு அறியத் தோன்றும்' என்ப

291 உவமப் பொருளின் உற்றது உணரும்
தெளி மருங்கு உளவே திறத்து இயலான

292 உவமப் பொருளை உணரும் காலை,
மரீஇய மரபின் வழக்கொடு வருமே.

293 இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே

294 பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி,
முன்னை மரபின் கூறும் காலைத்,
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே.

295 உவமப் போலி ஐந்து' என மொழிப

296 தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்,
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வரூஉம் திறத்தியல்' என்ப.

297 கிழவி சொல்லின் அவள் அறி கிளவி

298 தோழிக்கு ஆயின், நிலம் பெயர்ந்து உரையாது.

299 கிழவோற்கு ஆயின், உரனொடு கிளக்கும்.

300 ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே

301 இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும்' என்ப

302 கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே

303 கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே

304 தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கி
கூறுதற்கு உரியர், கொள்வழியான.

305 வேறுபட வந்த உவமத்