சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   223
Zoom In NormalZoom Out


தோற்றம்
கூறிய மருங்கின் கொள்வழிக் கொளாஅல்!

306 ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே

307 உவமத் தன்மையும் உரித்து' என மொழிப
'பயனிலை புரிந்த வழக்கத்தான'

308 தடுமாறு உவமம் கடி வரை இன்றே

309 அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே;
நிரல் நிறுத்து அமைத்த, நிரல் நிறை, சுண்ணம்,
வரன் முறை வந்த மூன்று அலங்கடையே.

310 'மாத்திரை, எழுத்து இயல், அசை வகை, எனாஅ;
யாத்த சீரே, அடி, யாப்பு, எனாஅ;
மரபே, தூக்கே, தொடை வகை, எனாஅ;
நோக்கே, பாவே, அளவு இயல், எனாஅ;
திணையே, கைகோள், கூற்றுவகை, எனாஅ;
கேட்போர், களனே, கால வகை, எனாஅ;
பயனே, மெய்ப்பாடு, எச்ச வகை, எனாஅ;
முன்னம், பொருளே, துறை வகை, எனாஅ;
மாட்டே, வண்ணமொடு, யாப்பு இயல் வகையின்
ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும்
அம்மை, அழகு, தொன்மை, தோலே,
விருந்தே, இயைபே, புலனே, இழைபு, எனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
நல் இசைப் புலவர், 'செய்யுள் உறுப்பு' என
வல்லிதின் கூறி, வகுத்து உரைத்தனரே.