சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   224
Zoom In NormalZoom Out


அவற்றுள்,
'மாத்திரை அளவும், எழுத்து இயல் வகையும்,
மேல் கிளந்தன்ன' என்மனார் புலவர்.

312 குறிலே, நெடிலே, குறில் இணை, குறில் நெடில்,
ஒற்றொடு வருதலொடு, மெய்ப் பட நாடி,
நேரும் நிரையும் என்றிசின் பெயரே.

313 இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே,
நேர்பும் நிரைபும் ஆகும்' என்ப
'குறில் இணை உகரம் அல் வழியான்'

314 இயலசை முதல் இரண்டு; ஏனைய உரியசை

315 தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது

316 ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம்

317 முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ;
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும்

318 குற்றியலுகரமும் முற்றியலுகரமும்
ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே

319 அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே

320 ஈர் அசை கொண்டும் மூஅசை புணர்த்தும்
சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே

321 இயலசை மயக்கம் இயற்சீர்; ஏனை
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்

322 முன் நிரை உறினும் அன்ன ஆகும்

323 நேர் அவண் நிற்பின் இயற்சீர் பால

324 இயலசை ஈற்று முன், உரியசை வரினே,
நிரையசை இயல ஆகும்'