சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   226
Zoom In NormalZoom Out


அடிக்கே

339 அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்
ஒன்றுதல் உடைய ஓரொரு வழியே.

340 நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே

341 அடி உள்ளனவே தளையொடு தொடையே

342 'அடி இறந்து வருதல் இல்' என மொழிப

343 அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே

344 'நால் எழுத்து ஆதி ஆக, ஆறு எழுத்து
ஏறிய நிலத்தே குறளடி' என்ப

345 'ஏழ் எழுத்து' என்ப, 'சிந்தடிக்கு அளவே
ஈர் எழுத்து ஏற்றம் அல் வழியான'

346 பத்து எழுத்து' என்ப, 'நேரடிக்கு அளவே
ஒத்த நால் எழுத்து ஒற்றலங்கடையே'

347 மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே;
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு' என மொழிப

348 மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே;
ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு' என மொழிப

349 சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது;
நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும்

350 'எழுத்து அளவு எஞ்சினும், சீர் நிலைதானே
குன்றலும் மிகுதலும் இல்' என மொழிப.

351 உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ
உயிர்த்திறம் இயக்கம் இன்மையான

352 வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும்