சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   228
Zoom In NormalZoom Out


இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே

369 'வெண்தளை விரவியும், ஆசிரியம் விரவியும்,
ஐஞ் சீர் அடியும் உள' என மொழிப.

370 அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு
நெறி பெற்று வரூஉம், நேரடி முன்னே.

371 எழு சீர் அடியே முடுகியல் நடக்கும்

372 முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும்

373 ஆசிரிய மருங்கினும், வெண்பா மருங்கினும்,
மூவகை அடியும் முன்னுதல் இலவே.

374 'ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின்
தோற்றம் முச் சீர்த்து ஆகும்' என்ப

375 இடையும் வரையார் தொடை உணர்வோரே

376 முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும்

377 வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே

378 வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்;
அசைச் சீர்த்து ஆகும், அவ் வழியான.

379 'நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும்
சீர் ஏற்று இறூஉம் இயற்கைய' என்ப

380 'நிரை அவண் நிற்பின், நேரும் நேர்பும்
வரைவு இன்று' என்ப வாய்மொழிப் புலவர்.

381 எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே

382 வெண்பா இயலினும் பண்புற முடியும்

383 'எழுத்து முதலா ஈண்யி அடியின்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பு' என மொழிப