சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   229
Zoom In NormalZoom Out


யாப்பு அறி புலவர்

384 பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முதுசொல்லொடு அவ் ஏழ் நிலத்தும்,
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது' என்மனார் புலவர்.

385 மரபேதானும்,
நாற் சொல் இயலான் யாப்பு வழிப்பட்டன்று.

386 அகவல் என்பது ஆசிரியம்மே

387 'அதா அன்று' என்ப 'வெண்பா யாப்பே'

388 'துள்ளல் ஓசை கலி' என மொழிப

389 தூங்கல் ஓசை வஞ்சி ஆகும்

390 மருட்பா ஏனை இரு சார் அல்லது,
தான் இது என்னும் தனிநிலை இன்றே.

391 அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளைவார்

392 'தூக்கு இயல் வகையே ஆங்கு' என மொழிப

393 'மோனை, எதுகை, முரணே, இயைபு, என
நால் நெறி மரபின, தொடை வகை' என்ப.

394 அளபெடை தலைப்பெய, ஐந்தும் ஆகும்.

395 பொழிப்பும், ஒரூஉம், செந்தொடை மரபும்,
அமைத்தனர் தெரியின், அவையுமார் உளவே.

396 'நிரல் நிறுத்து அமைத்தலும், இரட்டை யாப்பம்,
மொழிந்தவற்று இயலான் முற்றும்' என்ப.