சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   231
Zoom In NormalZoom Out


பா, என்று ஆங்கு
ஆயிரு பாவினுள் அடங்கும்' என்ப

413 'ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலி' என மொழிப
வாழ்த்தியல் வகை நாற்பாவிற்கும் உரித்தே

414 'வழிபடு தெய்வம் நின் புறங்காப்பப்
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து,
பொலிமின்' என்னும் புறநிலை வாழ்த்தே;
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

416 வாயுறை வாழ்த்தே, அவையடக்கியலே,
செவியறிவுறூஉ என அவையும் அன்ன.

417 வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்,
வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்
தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே.

418 அவையடக்கியலே அரில் தபத் தெரியின்,
'வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின்' என்று,
எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே.

419 செவியுறைதானே,
'பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன்' எனச் செவியுறுத்தன்றே.

420 'ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்
குட்டமும் நேரடிக்கு ஒட்டின' என்ப

421 குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும்

422 'மண்டிலம், குட்டம், என்று இவை இரண்டும்
செந்தூக்கு இயல' என்மனார் புலவர்.

423 நெடுவெண்