சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   233
Zoom In NormalZoom Out


மனார் புலவர்.

434 'வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்,
அங்கதச் செய்யுள்' என்மனார் புலவர்.

435 ஒத்தாழிசைக்கலி, கலிவெண் பாட்டே,
கொச்சகம், உறழொடு, கலி நகல் வகைத்தே.

436 அவற்றுள்,
ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும்.

437 'இடைநிலைப்பாட்டே, தரவு, போக்கு, அடை, என
நடை பயின்று ஒழுகும் ஒன்று' என மொழிப

438 தரவேதானும் நால் அடி இழிபு ஆய்,
ஆறு இரண்டு உயர்வும் ஏறவும் பெறுமே.

439 'இடைநிலைப்பாட்டே,
தரவு அகப்பட்ட மரபின' என்ப

440 அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர்,
நடை நவின்று ஒழுகும்' ஆங்கு' என மொழிப.

441 போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே;
தரவு இயல் ஒத்தும், அதன் அகப்படுமே;
புரை தீர் இறுதி நிலையுரைத்தன்றே.

442 ஏனை ஒன்றே,
தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே.

443 அதுவே,
வண்ணகம், ஒருபோகு, என இருவகைத்தே.

444 'வண்ணகந்தானே,
தரவே, தாழிசை, எண்ணே, வாரம், என்று
அந் நால் வகையின் தோன்றும்' என்ப

445 தரவேதானும்,
நான்கும் ஆறும் எட்டும் என்ற
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும்.

446 'ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே;