சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   235
Zoom In NormalZoom Out


பாநிலை வகையே கொச்சகக் கலி' என
நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே.

458 கூற்றுறம் மாற்றமும் இடை இடை மிடைந்தும்,
போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே.

459 ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை
ஆயிரம் ஆகும்; இழிபு மூன்று அடியே

460 நெடுவெண்பாட்டே முந்நால் அடித்தே;
குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே

461 அங்கதப் பாட்டு அவற்றளவோடு ஒக்கும்

462 'கலிவெண்பாட்டே, கைக்கிளைச் செய்யுள்,
செவியறி, வாயுறை, புறநிலை, என்று இவை
தொகு நிலை மரபின் அடி இல' என்ப.

463 புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ, எனத்
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்,
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்
பண்புற முடியும் பாவின' என்ப.

464 பரிபாட்டெல்லே,
நால் ஈரைம்பது உயர்பு அடி ஆக,
ஐ ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை.

465 அளவிய வகையே அனைவகைப்படுமே

466 'எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்,
அடி வரை இல்லன ஆறு' என மொழிப

467 அவைதாம்,
நூலினான, உரையினான,
நாடியொடு புணர்ந்த பிசியினான,
ஏது நுதலிய முதுமொழியான,
மறை