மொழி கிளந்த மந்திரத்தான,
கூற்று இடை வைத்த குறிப்பினான
468 அவற்றுள்,
நூல் எனப்படுவது நுவலும் காலை,
முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்,
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி,
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து,
நுண்ணிதின் விளக்கல் அது வதன் பண்பே
469 அதுவேதானும், ஒரு நால் வகைத்தே
470 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப
471 அவற்றுள்,
சூத்திரம் தானே
ஆடி நிழலின் அறியளத் தோன்றி,
நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க,
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே
472 'நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது
ஓத்து' என மொழிப உயர்மொழிப் புலவர்
473 ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்
474 'மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்,'
தோன்று மொழிப் புலவர், 'அது பிண்டம்' என்ப
475 'பாட்டு இடை வைத்த குறிப்பினானும்,
பா இன்று எழுந்த கிளவியானும்,
பொருளோடு புணராப் பொய்ம்மொழி யானும்,
பொருளொடு

|