சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   237
Zoom In NormalZoom Out


புணர்ந்த நகைமொழியானும், என்று
உரை வகை நடையே நான்கு' என மொழிப

476 அதுவேதானும் இரு வகைத்து ஆகும்

477 ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே;
ஒன்றே யார்க்கும் வரைநிலை இன்றே

478 ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்,
தோன்றுவது கிளந்த துணிவினானும்,
என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே

479 'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும்,
மென்மையும், என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி' என்ப

480 'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழிதானே மந்திரம்' என்ப

481 எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப்
பொருட்புறத்ததுவே, குறிப்பு மொழியே

482 பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்
பாட்டின் இயல பண்ணத்தியல்பே

483 அதுவேதானும் பிசியொடு மானும்

484 அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்;
அடி இகந்து வரினும் கடி வரை இன்றே

485 கிளர் இயல் வகையின், கிளந்தன தெரியின்,
அளவியல் வகையே அனை வகைப்படுமே

486 கைக்கிளை முதலா எழு பெருந் திணையும்,