முற் கிளந்தனவே, முறையினான
487 காமப் புணர்ச்சியும், இடம் தலைப்படலும்,
பாங்கொடு தழாஅலும், தோழியின் புணர்வும், என்று
ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு
மறை என மொழிதல் மறையோர் ஆறே
488 மறை வெளிப்படுதலும், தமரின் பெறுதலும்,
இவை முதலாகிய இயல் நெறி திரியாது,
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே.
489 மெய் பெறும் அவையே கைகோள் வகையே
490 பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி,
சீர்த்தகு சிறப்பின் கிழவன், கிழத்தியோடு,
அளவு இயல் மரபின் அறு வகையோரும்
களவினில் கிளவிக்கு உரியர்' என்ப
491 பாணன், கூத்தன், விறலி, பரத்தை,
ஆணம் சான்ற அறிவர், கண்டோர்,
பேணுதகு சிறப்பின் பார்ப்பான், முதலா,
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ,
தொல் நெறி மரபின் கற்பிற்குரியர்.
492 ஊரும், அயலும், சேரியோரும்,
நோய் மருங்கு அறிநரும், தந்தையும், தன்னையும்,
கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது,
கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும்.
493 கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும்
நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது
494 ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு
கண்டோர் மொழிதல் கண்டது' என்ப
495 இடைச் சுரமருங்கின், கிழவன் கிழத்தியொடு
வழக்கியல் ஆணையின் கிளத்

|