சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   239
Zoom In NormalZoom Out


தற்கும் உரியன்.

496 ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு
மொழிந்தாங்கு உரியர், முன்னத்தின் எடுத்தே.

497 மனையோன் கிளவியும் கிழவன் கிளவியும்,
நினையும் காலை, கேட்குநர் அவரே.

498 பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே

499 பரத்தை, வாயில், என இரு வீற்றும்
கிழத்தியைச் சுட்டாகக் கிளப்புப் பயன் இலவே.

500 வாயில் உசாவே தம்முள் உரிய

501 ஞாயிறு, திங்கள், அறிவே, நாணே,
கடலே, கானல், விலங்கே, மரனே,
புலம்புறு பொழுதே, புள்ளே, நெஞ்சே,
அவை அல பிறவும், நுதலிய நெறியான்,
சொல்லுந போலவும், கேட்குந போலவும்,
சொல்லியாங்கு அமையும்' என்மனார் புலவர்.

502 ஒரு நெறிப்பட்டு, ஆங்கு ஓர் இயல் முடியும்
கரும நிகழ்ச்சி இடம்' என மொழிப.

503 இறப்பே, நிகழ்வே, எதிரது, என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணரப்
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.

504 இது நனி பயக்கும், இதனான் என்னும்
தொகு நிலைக்