சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   240
Zoom In NormalZoom Out


கிளவி பயன் எனப்படுமே.

505 உய்த்துணர்வு இன்றித் தலைவரும் பொருண்மையின்,
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும்.

506 எண் வகை இயல் நெறி பிழையாதாகி
முன்னுறக் கிளந்த முடிவினது, அதுவே.

507 சொல்லொடும் குறிப்பொடும் முடிபு கொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்

508 இவ் இடத்து, இம் மொழி, இவர் இவர்க்கு உரிய' என்று
அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம்.

509 இன்பமும், இடும்பையும், புணர்வும், பிரிவும்,
ஒழுக்கமும், என்று இவை இழுக்கு நெறி இன்றி,
இது வாகித் திணைக்கு உரிப் பொருள் எனாது,
பொதுவாய் நிற்றல் பொருள் வகை' என்ப

510 அவ்வம் மக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவண் வரினும் திறவதின் நாடித்,
தத்தம் இயலான் மரப்பொடு முடியின்,
அத் திறந்தானே 'துறை' எனப்படுமே.

511 அகன்று பொருள் கிடப்பினும், அணுகிய நிலையினும்,
இயன்று பொருள் முடியத் தந்தனர், உணர்த்தல்
மாட்டு' என மொழிப 'பாட்டியல் வழக்கின்'.

512 மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி
உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே

513 வண்ணம்தானே நால் ஐந்து' என்ப

514 அவைதாம்,
பாஅ