சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   241
Zoom In NormalZoom Out


வண்ணம், தாஅ வண்ணம்,
வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம்,
இயைபு வண்ணம், அளபெடை வண்ணம்,
நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம்,
சித்திர வண்ணம், நலிபு வண்ணம்,
அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம்,
ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம்,
எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம்,
தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம்,
உருட்டு வண்ணம், முடுகு வண்ணம், என்று
ஆங்கு' என மொழிப-அறிந்திசினோரே "

515 அவற்றுள்,
பாஅ வண்ணம்
சொற்சீர்த்து ஆகி, நூற்பால் பயிலும்.

516 தாஅ வண்ணம்
இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும்

517 வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே

518 மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே

519 இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே

520 அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்

521 நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்

522 குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்

523 சித்திர வண்ணம்
நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே