சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   242
Zoom In NormalZoom Out


நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்

525 அகப்பாட்டு வண்ணம்
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே

526 புறப்பாட்டு வண்ணம்
முடிந்தது போன்று முடியாதாகும்

527 ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்

528 ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்

529 எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்

530 அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும்

531 தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்

532 ஏந்தல் வண்ணம்
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்

533 உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்

534 முடுகு வண்ணம்
அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே

535 வண்ணம்தாமே இவை' என மொழிப

536 வனப்பு இயல்தானே வகுக்கும் காலை,
சின் மென் மொழியான் தாய பனுவலின்,
அம்மைதானே அடி நிமிர்பு இன்றே.

537 செய்யுள் மொழியால் சீர் புனைந்து யாப்பின்,
அவ் வகைதானே 'அழகு' எனப்படுமே.

538 தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழைமை