சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   243
Zoom In NormalZoom Out


மேற்றே

539 இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்,
பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்,
தோல்' என மொழிப தொன் மொழிபப் புலவர்.

540 விருந்தேதானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே

541 ஞகாரை முதலா னகார ஈற்றுப்
புள்ளி இறுதி 'இயைபு' எனப்படுமே.

542 தெரிந்த மொழியான் செவ்விதின் கிளந்து,
தேர்தல் வேண்டாது, குறித்தது தோன்றின்,
புலன்' என மொழிப புலன் உணர்ந்தோரே.

543 ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது,
குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து,
ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் ஒழுகின்
இழைபின் இலக்கணம் இயைந்ததாகும்.

544 செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி,
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவ உள எனினும், வந்தவற்று இயலான்,
திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.