சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   245
Zoom In NormalZoom Out


பட, மறியே.

557 கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப

558 மகவும், பிள்ளையும், பறழும், பார்ப்பும்,
அவையும் அன்ன, அப்பாலான.

559 யானையும், குதிரையும், கழுதையும், கடமையும்,
ஆனோடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.

560 எருமையும் மரையும் வரையார் ஆண்டே

561 கவரியும் கராகமும் நிகர், அவற்றுள்ளே.

562 ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்

563 குஞ்சரம் பெறுமே, குழவிப் பெயர்க் கொடை.

564 ஆவும் எருமையும் அவை சொலப்படுமே

565 கடமையும் மரையும் முதனிலை ஒன்றும்

566 குரங்கும் முகவும் ஊகமும் மூன்றும்,
நிரம்ப நாடின், அப் பெயர்க்கு உரிய.

567 குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை
கிழவ அல்ல, மக்கட்கண்ணே.

568 பிள்ளை, குழவி, கன்றே, போத்து, எனக்
கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே.

569 நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே

570 சொல்லிய மரபின் இளமைதானே,
சொல்லும் காலை, அவை அலது இலையே.

571 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு