சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   247
Zoom In NormalZoom Out


தோன்றும்

590 இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய

591 'கலை' என் காட்சி உழைக்கும் உரித்தே;
நிலையிற்று, அப் பெயர், முசுவின்கண்ணும்.

592 'மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த' என்ப 'யாட்டின்கண்ணே'

593 சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்,
மா இருந் தூவி மயில் அலங்கடையே.

594 'ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்து' என மொழிப

595 ஆண்பால் எல்லாம் 'ஆண்' எனற்கு உரிய;
பெண்பால் எல்லாம் 'பெண்' எனற்கு உரிய;
காண்ப அவை அவை அப்பாலான

596 'பிடி' என் பெண் பெயர் யானை மேற்றே

597 ஒட்டகம், குதிரை, கழுதை, மரை, இவை
'பெட்டை' என்னும் பெயர்க்கொடைக்கு உரிய.

598 'புள்ளும் உரிய அப் பெயர்க்கு' என்ப

599 பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்

600 கோழி, கூகை, ஆயிரண்டு அல்லவை
சூழும் காலை 'அளகு' எனல் அமையா.

601 அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே

602 புல்வாய், நவ்வி, உழையே, கவரி,
சொல்வாய் நாடின், பிணை எனப்படுமே.

603 'பன்றி, புல்வாய், நாய், என மூன்றும்
ஒன்றிய' என்ப