சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   248
Zoom In NormalZoom Out


'பிணவின் பெயர்க்கொடை'.

604 'பிணவல்' எனினும், அவற்றின் மேற்றே.

605 பெற்றமும் எருமையும் மரையும் ஆவே

606 பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய

607 எருமையும் மரையும் பெற்றமும் நாகே

608 நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே

609 மூடும் கடமையும் யாடு அல பெறாஅ

610 'பாட்டி' என்பது 'பன்றியும் நாயும்'

611 நரியும் அற்றே, நாடினர் கொளினே.

612 குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி

613 குரங்கின் ஏற்றினைக் 'கடுவண்' என்றலும்,
மரம் பயில் கூகையைக் 'கோட்டான்' என்றலும்,
செவ் வாய்க் கிளியைத் 'தத்தை' என்றலும்,
வெவ் வாய் வெருகினைப் 'பூசை' என்றலும்,
குதிரையுள் ஆணினைச் 'சேவல்' என்றலும்,
இருள் நிறப் பன்றியை 'ஏனம்' என்றலும்,
எருமையுள் ஆணினைக் 'கண்டி' என்றலும்,
முடிய வந்த அவ் வழக்கு உண்மையின்,
கடியல் ஆகா, கடன் அறிந்தோர்க்கே.

614 பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே

615 நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய.

616 படையும், கொடியும், குடையும், முரசும்,
நடை நவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

617 அந்தணாளர்க்