சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   249
Zoom In NormalZoom Out


குரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே

618 பரிசில், பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்,
நெடுந்தகை, செம்மல், என்று இவை பிறவும்,
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே.
அந்த ணாளர்க்கு அரசு வரைவு இன்றே.

619 ஊரும், பெயரும், உடைத்தொழிற் கருவியும்,
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.

620 'தலைமைக் குணச் சொல்லும் தத்தமக்கு உரிய
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப' என்ப

621 'இடை இருவகையோர் அல்லது, நாடின்,
படை வகை பெறாஅர்' என்மனார் புலவர்.

622 வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை

623 மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார், அப் பாலான.

624 கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே

625 'வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
இல்' என மொழிப 'பிறவகை நிகழ்ச்சி'.

626 'வேந்தி விடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர்' என்ப'அவர் பெறும் பொருளே'

628 வில்லும், வேலும், கழலும், கண்ணியும்,
தாரும், மாலையும், தேரும், வாளும்,
மன் பெறு மரபின் ஏனோர்க்கு உரிய.