சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   252
Zoom In NormalZoom Out


'சூத்திரத்துட் பொருள் அன்றியும், யாப்புற
இன்றியமையாது இயைபவை எல்லாம்
ஒன்ற உரைப்பது உரை' எனப்படுமே.

650 'மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த்
தன் நூலானும் முடிந்த நூலானும்
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித்
தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ,
துணிவொடு நிற்றல்' என்மனார் புலவர்.

651 சொல்லப்பட்டன எல்லா மாண்பும்
மறுதலை ஆயினும், மற்று அது சிதைவே.

652 சிதைவு இல என்ப முதல்வன்கண்ணே

653 முதல் வழி ஆயினும், யாப்பினுள் சிதையும்,
வல்லோன் புணரா வாரம் போன்றே.

654 சிதைவு எனப்படுபவை வசை அற நாடின்,
கூறியது கூறல், மாறு கொளக் கூறல்,
குன்றக் கூறல், மிகை படக் கூறல்,
பொருள் இல கூறல், மயங்கக் கூறல்,
கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல்,
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்,
தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்,
என்ன வகையினும் மனக் கோள் இன்மை,
அன்ன பிறவும் அவற்று விரி ஆகும்.

655 எதிர் மறுத்து உணரின், அத் திறத்தவும் அவையே.

656 ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின்
நுதலியது அறி