சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   253
Zoom In NormalZoom Out


தல், அதிகார முறையே,
தொகுத்துக் கூறல், வகுத்து மெய்ந் நிறுத்தல்,
மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல்,
மொழியாத தனை முட்டு இன்று முடித்தல்,
வாராததனான் வந்தது முடித்தல்,
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்,
முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே,
ஒப்பக் கூறல், ஒருதலை மொழிதல்,
தன் கோள் கூறல், முறை பிறழாமை,
பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல்,
இறந்தது காத்தல், எதிரது போற்றல்,
மொழிவாம் என்றல், கூறிற்று என்றல்,
தான் குறியிடுதல், ஒருதலை அன்மை,
முடிந்தது காட்டல், ஆணை கூறல்,
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்,
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்,
மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்,
பிறன் கோட்கூறல், அறியாது உடம்படல்,
பொருள் இடையிடுதல், எதிர் பொருள் உணர்த்தல்,
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்,
தந்து புணர்ந்து உரைத்தல், ஞாபகம் கூறல்,
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு, மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிற அவண் வரினும்,
சொல்லிய வகையான் சுருங்க நாடி,
மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு,
இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்,
நுனித்தகு