மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   167
Zoom In NormalZoom Out

ஊறு இன்று ஏறலின்,
மதம் தபு ஞமலி நாவின் அன்ன,
துளங்கு இயல் மெலிந்த, கல் பொரு சீறடிக்,
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ,
விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து,
இலங்கு வளை, விறலியர் நிற் புறம் சுற்றக்
கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல்,
புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்,
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சிக்
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ!
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு,
யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும்,
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய,
துளை பறை நிவக்கும் புள்ளினம் மானப்
புனை தார்ப் பொலிந்த வண்டு படு மார்பின்,
வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள்
மலர் போல் மழைக் கண் மங்கையர், கணவன்;
முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்,
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்குப்
புது நிறை வந்த புனல் அம் சாயல்,
மதி மாறு ஓரா நன்று உணர்