| வரும் பெரும் பூண், நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு, உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த புள்ளினிர் மன்ற, எற்றாக் குறுதலின் ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும், வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும், மலையும், சோலையும், மா புகல் கானமும், தொலையா நல் இசை உலகமொடு நிற்பப் பலர் புறம் கண்டு, அவர் அருங் கலம் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும், இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு, தூத் துளி பொழிந்த பொய்யா வானின், வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும், நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து, வல்லார் ஆயினும் புறம் மறைத்துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி, நல்லிதின் இயக்கும் அவன் |