| தித் தோரை; தொய்யாது வித்திய துளர் படு துடவை ஐயவி அமன்ற; வெண் கால் செறுவின் மை என விரிந்தன, நீள் நறு நெய்தல்; செய்யாப் பாவை வளர்ந்து, கவின் முற்றிக், காயம் கொண்டன, இஞ்சி; மா இருந்து, வயவுப் பிடி முழந் தாள் கடுப்பக் குழிதொறும், விழுமிதின் வீழ்ந்தன, கொழுங் கொடிக் கவலை; காழ் மாண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்தென, ஊழ் மலர் ஒழி முகை உயர்முகம் தோயத் துறுகல் சுற்றிய சோலை வாழை, இறுகு குலை முறுகப் பழுத்த; பயம் புக்கு ஊழ் உற்று அலமரும், உந்தூழ்; அகல் அறைக் காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின், காலின் உதிர்ந்தன, கருங் கனி நாவல்; மாறு கொள ஒழுகின, ஊறு நீர் உயவை; நூறொடு குழீஇயின, கூவை; சேறு சிறந்து, உண்ணுநர் தடுத்தன, தேமா; புண் அரிந்து, அரலை உக்கன, நெடுந் தாள் ஆசினி; விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்பக் குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்துக் கீழும் |