மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   170
Zoom In NormalZoom Out

கார் வாய்த்து எதிரிச்
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி,
முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப் பலவே:
தீயின் அன்ன ஒண் செங் காந்தள்
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து,
அறியாது எடுத்த புன் புறச் சேவல்,
ஊஉன் அன்மையின், உண்ணாது உகுத்தென,
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்,
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும்
மண இல் கமழும் மா மலைச் சாரல்,
தேனினர், கிழங்கினர், ஊன் ஆர் வட்டியர்,
சிறு கண் பன்றிப் பழுதுளி போக்கிப்
பொருது தொலை யானைக் கோடு சீர் ஆகத்
தூவொடு மலிந்த காய கானவர்
செழும் பல் யாணர்ச் சிறுகுடிப் படினே,
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர்
அன்று, அவண் அசைஇ, அல் சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து,
சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி,
'நோனாச் செருவின் வலம்படு