மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   171
Zoom In NormalZoom Out

நோன் தாள்
மான விறல் வேள் வயிரியம்' எனினே,
நும் இல் போல நில்லாது புக்குக்,
கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேட் புலம்பு அகல இனிய கூறி,
பரூஉக் குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக் கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்
ஏறித் தரூஉம் இலங்கு மலைத் தாரமொடு,
வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல்
குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து, வைகறைப்
பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர,
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்,
வரு விசை தவிர்த்த கட மான் கொழுங் குறை,
முளவுமாத் தொலைச்சிய பைந் நிணப் பிளவை,
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ,
வெண் புடைக் கொண்ட துய்த் தலைப் பழனி
இன் புளிக் கலந்து மா மோர் ஆகக்
கழை வளர் நெல்லின் அரி, உலை ஊழ்த்து,
வழை அமை சாரல் கமழத் துழைஇ,
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக்
குறமகள், ஆக்கிய வால் அவிழ்