| வல்சி, அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ, மக முறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர் செருச் செய் முன்பின் குருசில் முன்னிய பரிசில் மறப்ப, நீடலும் உரியிர் அனையது அன்று அவன் மலைமிசை நாடே நிரை இதழ்க் குவளை கடி வீ தொடினும், வரை அரமகளிர் இருக்கை காணினும், உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்; பல நாள் நில்லாது, நில நாடு படர்மின் விளை புனம் நிழத்தலின், கேழல் அஞ்சிப் புழைதொறும் மாட்டிய இருங் கல் அரும்பொறி உடைய, ஆறே; நள்ளிருள் அலரி விரிந்த விடியல், வைகினிர், கழிமின் நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின், முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில், கரந்து, பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே; குறிக் கொண்டு, மரம் கொட்டி, நோக்கிச், செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச, வறிது நெறி ஒரீஇ, வலம் செயாக் கழிமின் புலந்து, |