| நுண் கோல் வேரலொடு எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் உயர் நிலை மாக் கல், புகர் முகம் புதைய, மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணைத் தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச் சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி, ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப் பராவு அரு மரபின் கடவுள் காணின், தொழாஅ நிர் கழியின் அல்லது, வறிது நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே அலகை அன்ன வெள் வேர்ப் பீலிக் கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்; கடும் பறைக் கோடியர் மகாஅர் அன்ன, நெடுங் கழைக் கொம்பர், கடுவன் உகளினும்; நேர் கொள் நெடு வரை, நேமியின் தொடுத்த, சூர் புகல் அடுக்கத்துப் பிரசம் காணினும், ஞெரேரென |