| பட்ட செந் நெறிக் கொண்மின் கயம் கண்டன்ன அகன் பை, அங்கண் மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும், துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி, இகந்து சேண் கமழும் பூவும், உண்டோர் மறந்து அமைகல்லாப் பழனும், ஊழ் இறந்து பெரும் பயம் கழியினும், மாந்தர் துன்னார் இருங் கால் வீயும், பெரு மரக் குழாமும்; இடனும் வலனும் நினையினிர் நோக்கிக் குறி அறிந்து, அவைஅவை குறுகாது கழிமின்: கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்துக் கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் நாடு காண் நனந் தலை மென்மெல அகன்மின் மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின், ஞாயிறு தெறாஅ மாக நனந் தலை, தேஎம் மருளும் அமையம் ஆயினும், இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் |