மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   182
Zoom In NormalZoom Out

மலை பிற்பட,
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின்
மை படு மா மலைப் பனுவலின் பொங்கிக்,
கை தோய்வு அன்ன கார் மழைத் தொழுதி,
தூஉய் அன்ன துவலை துவற்றலின்,
தேஎம் தேறாக் கடும் பரிக் கடும்பொடு,
காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல்,
கூவல் அன்ன விடரகம் புகுமின்,
இருங்கல் இகுப்பத்து இறு வரை சேராது,
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து,
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும்,
மண் கனை முழவின்தலைக் கோல், கொண்டு,
தண்டு கார் ஆகத் தளர்தல் ஓம்பி,
ஊன்றினிர் கழிமின்; ஊறு தவப் பலவே:
அயில் காய்ந்தன்ன கூர்ங் கல் பாறை,
வெயில் புறந்தரூஉம் இன்னல்