| மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர் சந்து நீவிப் புல் முடிந்து இடுமின் செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார், கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை, ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே: தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவிகை ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே, மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் ஆங்கனம் அற்றே, நம்மனோர்க்கே; அசைவுழி அசைஇ, அஞ்சாது கழிமின் புலி உற, வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி, கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து, சிலை ஒலி வெரீஇய செங் கண் மரை |