மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   187
Zoom In NormalZoom Out

விளை நெல்லின், அவரை அம் புளிங் கூழ்,
அற்கு, இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;
பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி
வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை,
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,
அசையினிர் சேப்பின், அல்கலும் பெறுகுவிர்
விசையம் கொழித்த பூழி அன்ன,
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை:
நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டிப்
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சிப்
புலரி விடியல் புள் ஓர்த்துத் கழிமின்
புல் அரைக் காஞ்சிப் புனல் பொரு புதவின்,
மெல் அவல், இருந்த ஊர்தொறும், நல்லி யாழ்ப்
பண்ணுப் பெயர்த்தன்ன, காவும்,